கருப்பு பூஞ்சை - சுகாதாரத்துறை உத்தரவு

கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கருப்பு பூஞ்சை - சுகாதாரத்துறை உத்தரவு
x
கருப்பு பூஞ்சை - சுகாதாரத்துறை உத்தரவு
 
கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்தல் வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள் பட்டியல் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு அளித்திட வேண்டும் எனவும்,நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பணியாற்றிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்