"1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி" - தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு

1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்க, தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
x
1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்க, தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று,  அப்போது பாடப் புத்தகங்கள் வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்