நடிகை சாந்தினி அளித்த புகார் எதிரொலி - மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
x
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின்பேரில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஒவ்வொரு பிரிவுக்குமான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நடிகை கொடுத்த வாட்ஸ்அப் ஆதாரங்கள் சைபர் கிரைம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் கோபாலபுரம் தனியார் மருத்துவருக்கு சம்மன் அனுப்பவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. மணிகண்டனை கைது செய்யவும், நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் இந்த ஆதாரங்களை தீவிரமாக போலீசார் சேகரித்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்