ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் எச்சரிக்கை
பதிவு : மே 31, 2021, 06:35 PM
குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு - அமைச்சர் எச்சரிக்கை  

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து,சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சுமார் 20 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இதில், கொரோனா காலத்தில் 2020ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 40 சதவீதம் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாகவும்,குறிப்பாக சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 72 பழங்குடி கிராமங்களில் பரவலாக நடைப்பெற்றுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஊரடங்கால் மாணவிகள் வீட்டிலேயே முடங்கியுள்ளதை பயன்படுத்தி, சில பெற்றோர்கள்  கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கீதாஜீவன் எச்சரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6919 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1756 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

86 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

38 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

6 views

பிற செய்திகள்

"டிரைவ் த்ரூ" தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளதால், அதற்கு இணை மருந்தினை ஆராய்ந்து விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

34 views

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கு - டொமினிகாவில் சோக்‌ஷி கைது

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்‌ஷிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

7 views

விரைவில் அமைச்சரவை அமைக்கப்படும்" - பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கருத்து

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், அமைச்சரவை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

23 views

ஓணம் பண்டிகையை வரவேற்கும் முதல்வர்: தலைமை செயலகத்தில் காய்கறி பயிரிடும் பணி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள தலைமை செயலக தோட்டத்தில் எட்டு வகையான காய்கறிகளை பயிரிடும் பணியை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

9 views

பெண் இயக்குநர் மீது தேசத்துரோக வழக்கு

லட்சத்தீவில் கொரோனா வைரஸ், பயோ ஆயுதமாக பயன்படுத்துகிறது எனக் குற்றம் சாட்டிய பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

146 views

கொரோனா மரணங்கள் பதிவு - மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா மரணங்களை பதிவு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.