"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
x
"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும்,வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும்,தெரிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் 2-ம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.3-ம் தேதி, கிருஷ்ணகிரி,வேலூர், திருவண்ணாமலை, சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும், என்றும்,குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 





Next Story

மேலும் செய்திகள்