சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம்" - காவல்துறையினர் அதிரடி

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 268 பேரை,போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம் - காவல்துறையினர் அதிரடி
x
சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம்" - காவல்துறையினர் அதிரடி 

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 268 பேரை,போலீசார் கைது செய்தனர்.முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கல்வராயன் மலை, வாழப்பாடி, மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ஊறல்களை  கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ள சாராயம் விற்பனை செய்தாக 32 நபர்களை கைதும் செய்துள்ளனர். இது தவிர, கடந்த பத்து நாட்களில் டாஸ்மாக் சரக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து  2 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  காவல்துறையின் அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்த மொத்தம் 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட் போலீஸ் தெரிவித்துள்ளது.

 

Next Story

மேலும் செய்திகள்