தன்னார்வலர்களின் இலவச உணவு சேவை - ஊரடங்கு முடியும் வரை வழங்க முடிவு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம், வாரசந்தை பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ஆதரவற்ற நபர்கள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.
x
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம், வாரசந்தை பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ஆதரவற்ற நபர்கள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர். இதை அறிந்த புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் தினமும் மதிய உணவு வழங்க திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து உணவு சமைத்து பாக்கெட்டுகளில் அடைத்து புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து தள்ளுவண்டியில் வைத்து ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்கினர். பேருந்து நிலைய வளாகத்தில் உடல் ஊனமுற்றதால் நகரமுடியாமல் படுத்துக்கிடந்த நபர்களுக்கு தேடிச்சென்று உணவு வழங்கப்பட்டது. முழு ஊரடங்கு முடியும் வரை தினமும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்படும் என தனியார் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்