தவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

தவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
x
அரபிக்கடலில் உருவாக்கியுள்ள தவ்-தே புயல் காரணமாக  தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புயலின் வேகம், நகர்வு குறித்து முதலமைச்சருக்கு வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்