உடனடியாக படுக்கை ஒதுக்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு

கொரோனா சிகிச்சை தொடர்பாக இயங்கி வரும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
x
கொரோனா சிகிச்சை தொடர்பாக இயங்கி வரும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா சிகிச்சை பணிகளை கண்காணிக்க சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரம் கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு திடீரென கட்டளை மையத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கண்காணிப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது 104 எண்ணிற்கு அழைத்த வானகரம் பகுதியைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது கோரிக்கையை கேட்ட செய்த முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக அவருக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியிட விவரங்களை தொடர்ந்து கண்காணிப்பதோடு, அனைத்து அழைப்புகளுக்கும் தடையில்லாமல் ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்