தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம், 34 கட்டங்களாக 616 பேரிடம் விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, 850 ஆவணங்கள் அடங்கிய  இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசாரணை ஆணையம் அளித்துள்ளது. இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தபோது தலைமைச் செயலாளர் இறையன்புவும் உடனிருந்தார்


Next Story

மேலும் செய்திகள்