15 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக போலீஸ் அகாடமி டிஜிபியாக பிரதீப் வி பிலீப் நியமனம்

சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம்.
15 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக போலீஸ் அகாடமி  டிஜிபியாக பிரதீப் வி பிலீப் நியமனம்
x
சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக 
இருந்த ஜெயந்த் முரளி ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு  பிரிவில் இருந்த எஸ்.பி ராஜா  சிபிசிஐடி வணிக புலனாய்வு  குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்/பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்பியாக சுரேஷ் குமார் நியமனம். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பிக்கள் உட்பட 15 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. அதன்படி, சிபிசிஐடி டிஜிபியாக இருந்து, பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிரதீப் வி பிலீப், தமிழக போலீஸ் அகாடமியின் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி ஆயுதப்படை ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு பிரிவு பொறுப்பில் இருந்து வந்த எஸ்.பி.க்கள் ராஜா சிபிசிஐடி வணிக புலனாய்வு குற்றப்பிரிவு எஸ்பியாகவும், சுரேஷ் குமார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை தெற்கு மண்டல ஏடிஜிபியாக இருந்த ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி தினகரன் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்