ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து.. தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

கடலூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
x
ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து.. தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு 

கடலூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மருத்துவ மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் முதல் தளத்தில் இருந்த ரசாயன பாய்லர் இன்று காலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் ரசாயன பொருட்கள் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த 7 ஊழியர்கள் விபத்து பகுதியில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆலையில் சிக்கிருந்த 7 பேரையும் மீட்டனர். இதில் ஒரு பெண் ஊழியர் உள்பட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், விபத்து காரணமாக ஆலையில் இருந்து ரசாயனம் வெளியேறியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்