எம்.பி வைத்திலிங்கம்,கே.பி.முனுசாமி ராஜினாமா - நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களான, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி தங்களது எம்.பி. பதவியை, ராஜினாமா செய்துள்ளனர்.
எம்.பி வைத்திலிங்கம்,கே.பி.முனுசாமி ராஜினாமா - நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு
x
புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களான, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி தங்களது எம்.பி. பதவியை, ராஜினாமா செய்துள்ளனர். கடந்த 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் அமைச்சர்களாக இருந்தனர். மீண்டும் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இருவரும் தோல்வியை தழுவினர். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வைத்திலிங்கத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ராஜ்ய சபை உறுப்பினராக்கினார். அவரது பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதே போல் கே.பி.முனுசாமி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ராஜ்ய சபா உறுப்பினரானார்.  அவரது பதவிக்காலம்  2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை உள்ளது. இதை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, தொகுதியில் இருந்து கே.பி.முனுசாமி வெற்றிப் பெற்றார். அதே போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருந்து வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் தங்களது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் திமுக கூட்டணியில் 159 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் 75 உறுப்பினர்களும் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்