ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடைபெற்று இருக்கிறது.
ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை
x
ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை 


தமிழகத்தில் ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடைபெற்று இருக்கிறது.தமிழகத்தில் நாளை முதல்  வரும் 24ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. இந்த காலகட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மது குடிப்போர் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளை நோக்கி படை எடுத்தனர். இதனால் நேற்று ஒரே நாளில் 426 கோடியே 24 லட்சம் ரூபாய் மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 100 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்று உள்ளது.2வதாக மதுரை மண்டலத்தில் 87 கோடியே 28 லட்சம் ரூபாய் மது விற்பனை நடைபெற்றது.இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 82 புள்ளி 59கோடி ரூபாய்,  சேலம் மண்டலத்தில் 79 புள்ளி 82 கோடி ரூபாய், கோவை மண்டலத்தில் 76 புள்ளி 12 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.இன்றும் மதுக்கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்க உள்ளதால்,  நேற்றைய விற்பனையை காட்டிலும் இன்று கூடுதலாக விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்