மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல - சென்னை உயர்நீதிமன்றம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர்.
மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின்  மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல - சென்னை உயர்நீதிமன்றம்
x
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில்  இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள 4 கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி, ராமசாமி என்பவரும் எதிர்ப்பு தெரிவித்து  ஜமாத் சார்பிலும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்த கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கோயில் திருவிழாவுக்கு அனுமதியளித்து கடந்த 2018 ஆண்டு  டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து  இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தது. 
மாற்று மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோயில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளதாக கூறிய நீதிபதிகள், கோயில் ஊர்வலங்களை அனைத்து சாலை, தெருக்களில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப  பெறவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்