கமல் பயன்படுத்திய வார்த்தை மிக கடுமையாது - ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.
கமல் பயன்படுத்திய வார்த்தை மிக கடுமையாது - ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட  செயலாளர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் ஜாபர், ஓம் குமார், சிவ சக்திவேல், கருப்பசாமி ஆகியோர் தங்கள்  ராஜினாமா கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளர். இது குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மக்கள் நீதி ம‌ய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் ராஜினாமாவை ஆதரித்து தாங்களும் ராஜினாமா செய்வதாகவும், மக்கள் நீதி மய்யத்தில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், கட்சிக்காக தனது பொருளாதாரத்தை இழந்தவர் மகேந்திரன் என்றும், அவர் குறித்து கமல்ஹாசன் பயன்படுத்திய வார்த்தை மிகவும் கடுமையானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்