"மக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" - மத்திய-மாநில அரசுகளுக்கு சரத்குமார் கோரிக்கை

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் - மத்திய-மாநில அரசுகளுக்கு சரத்குமார் கோரிக்கை
x
 சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு  கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும்  என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், அதில் இருந்து விடுபடுவதற்கு ஊரடங்கே தற்காலிக தீர்வாக இருக்க முடியும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த திட்டங்கள் தீட்டுவதும், அதனை செயல்படுத்துவதும் நியாயமான, அவசியமான நடவடிக்கை தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கை முழுமையாக வரவேற்கும் அதேசமயம், சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திட வேண்டும் என்று  சரத்குமார் கேட்டு கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்