தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் -  கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்

எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்

சிடி ஸ்கேன் கட்டணம் 8,000 ரூபாய் வரையும், கொரோனா பரிசோதனைக்கு 10,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்

புதியதாக அமையப்போகும் அரசு, உடனடியாக கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்துவதோடு, அதிகபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவ நடைமுறைகளும் தரப்படுத்தப்பட்டு, ஒரே மாதிரி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலினை கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்