ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் விநியோகம் வழங்கியதைத் தொடர்ந்து, இரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட்
x
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் விநியோகம் வழங்கியதைத் தொடர்ந்து, இரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க முடிவு செய்த வேதாந்தா நிறுவனம், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆய்வு  மேற்கொள்ள குழு அமைத்து உத்தரவிட்டது.
அந்தக் ஆய்வுக் குழு, புதன் கிழமை காலை முதல் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் ஆய்வு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர், மின் இணைப்பு வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 24-மெகாவாட் மின்சாரமும், 10-லட்சம் லிட்டர் தண்ணீரும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஸ்டெர்லைட்  ஆலையில், ஆக்சிஜன் கூடத்தில், சோதனை ஓட்டம் செய்யவும், ஓரிரு தினங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்