முதலமைச்சராக 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்.
x
தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஆட்சியமைக்க உரிமை கோரி, எம்.எல்.ஏக்களின் தீர்மானத்தை ஸ்டாலின் அளித்திருந்த நிலையில், ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நாளை மறுநாள் காலை 9 மணிக்கு ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்