அரசு மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்

சென்னையில் நாளுக்குநாள் கொரனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
x
அரசு மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்

சென்னையில் நாளுக்குநாள் கொரனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் பெரும்பாலும் முழுமையாக நிரம்பி விட்டன. கொரோனோ நோயாளிகளுக்கான சாதாரண படுக்கைகள் மட்டுமே மீதம் உள்ளன.அரசு மருத்துவமனைகளின் கீழ் இயங்கி வரும் 13 கோவிட் ஹெல்த் கேர் மையங்களில் ஆயிரத்து 122 சாதாரண படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 404 படுக்கைகள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன.620 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதில் 178 படுக்கைகள் மட்டுமே மீதம் உள்ளன. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 9 படுக்கைள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன.ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்ட நிலையில், 4 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே மீதம் உள்ளன.ஓமந்தூரார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. சென்னையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு சிகிச்சையில் உள்ளனர். எனினும், அதிகப்படியான நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதால், ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது.எனவே காலியாக உள்ள சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்