ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு
பதிவு : மே 04, 2021, 12:57 PM
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் பணியாற்ற மருத்துவ பணியாளர் தேர்வாணையம்  மூலம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என செவிலியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தது.சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது.மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திமுக வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கொரனோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக  பதவியேற்பு விழாவிற்கு முன்னதாகவே ஸ்டாலின் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய இசைவு தெரிவித்து இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6241 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

917 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

306 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

96 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

8 views

பிற செய்திகள்

ஊடகவியலாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் - ஸ்டாலின் அறிவிப்பு

ஊடகத்துறையில் பணியாற்றுவோரும் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18 views

ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை

சேலத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இல்லாததால் 20 நோயாளிகள் அவதிப்படுவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனே ஆக்சிஜன் வழங்கியது.

11 views

"7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்" - அதிமுக தலைமை அறிவிப்பு

வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

139 views

மருத்துவ உயர்படிப்பு : பிஜி நீட் தேர்வு - மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு

மருத்துவ உயர்படிப்பிற்கான, முதல்நிலை நீட் தேர்வு மேலும், 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

41 views

அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை - ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

206 views

"இன்று மாலைக்குள் தேர்தல் பணிகள் நிறைவு"- சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.