ஊடகவியலாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் - ஸ்டாலின் அறிவிப்பு
ஊடகத்துறையில் பணியாற்றுவோரும் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறையில் பணியாற்றுவோரும் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் ஊடகத்துறை விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.கடும் மழை, கொளுத்தும் வெயில், பெருந்தொற்றில் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்.செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வரும் அனைவருமே முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
Next Story