"மே2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" - தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டம்

தமிழகத்தில் மே 2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சந்தித்த சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு பல சுற்று ஆலோசனைகள் நடத்தி இருப்பதாகவும், தமிழக தலைமை செயலாளருடன் தான் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் மே.2-ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என உறுதியளித்த சத்யபிரதா சாகு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஊரடங்கு ரத்து குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் எனவும் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும் என்றும், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கான வாக்கு எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளார். 

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து ஓரிரு நாட்களில் விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்