கூடுதலாக 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு

கூடுதலாக 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு
x
கூடுதலாக 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு 

தமிழகத்திற்கு இன்று கூடுதலாக  2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து வந்துள்ளது. தமிழகத்திற்கு இதுவரை 53 லட்சத்து மூன்று ஆயிரத்து  590 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும்,  8 லட்சத்து 82 ஆயிரத்து 130 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தும் வந்தடைந்தது.இதன் மூலம் மொத்தம் 63 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்துள்ளன.இதுவரை மொத்தம் 50 லட்சத்து 23 ஆயிரத்து 154 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆனால் மூன்று லட்சத்து 60 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளன.இந்நிலையில், கூடுதலாக இன்று இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்