"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
"மாநில அரசுகளுக்கும், ரூ.150 -ல் தடுப்பூசி" - மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்


மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, கோவிஷீல்ட் தடுப்பூசியை, 150 ரூபாய்க்கு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் சீரம் நிறுவனம் வழங்கிட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாயை மத்திய அரசு இப்போது தான், செலுத்துகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்?  என்றும், மத்திய அரசு அறிவித்துள்ள "அனைவருக்கும் தடுப்பூசி" என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன் வரும் அந்தத் தயாரிப்பு நிறுவனம் மாநில அரசுகளுக்கு மட்டும் 400 ரூபாயாக விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியே இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும், 150 ரூபாய் என்ற விலைக்கே தடுப்பூசியை, விநியோகிக்க தடுப்பூசி நிறுவனங்களை அழைத்துப் பேசிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்