கமல்ஹாசன் குற்றச்சாட்டு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டமாக மறுப்பு

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
x
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும், அரசியல் கட்சிகள் தெரிவிப்பது போல குறிப்பாக கமலஹாசன் தெரிவித்தது போன்று, வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்தவிதமான குளறுபடிகளும் நடக்கவில்லை, எந்த தவறும் நடைபெறவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கைகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரக்கூடிய லாரிகளில் காவலர்களுக்கான நடமாடும் கழிவறை சாதனங்கள் இருக்கின்றன என்றும், வேறு எந்த பொருட்களும் அதில் கொண்டு வரப்படவில்லை என, விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்