கோடாரியால் வெட்டி இளைஞர் கொலை... மனைவி கண்முன் அரங்கேறிய கொடூரம்

கோடாரியால் வெட்டி இளைஞர் கொலை... மனைவி கண்முன் அரங்கேறிய கொடூரம்
கோடாரியால் வெட்டி இளைஞர் கொலை... மனைவி கண்முன் அரங்கேறிய கொடூரம்
x
கோடாரியால் வெட்டி இளைஞர் கொலை... மனைவி கண்முன் அரங்கேறிய கொடூரம் 

மனைவி கண்முன்னேயே இளைஞரை கோடாரியால் வெட்டிக் கொன்ற 7 பேர் கும்பலை போலீசார், கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டைத் தெருவைச் சேர்ந்த நசீர்கான், சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வந்துள்ளார். முன்னர் ஆட்டோ ஓட்டிய இடத்தில், சங்க நிர்வாகம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மஸ்தானுக்கும், நசீர்கானுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நசீர்கானை கடத்திய மர்மகும்பல், கழுத்தை அறுத்த நிலையில், அவர் தப்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தவறவிட்ட செல்போன் மூலம் துப்புத்துலக்கிய போலீசார், மஸ்தான், நூருல்லா, கவியரசு, ஷான்பாஷா, சதாம்உசேன், முகமதுஅலி, முகமது ரபி ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்