13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்... 2 முதியவர்கள் உள்பட 3 பேர் அட்டூழியம்

13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்... 2 முதியவர்கள் உள்பட 3 பேர் அட்டூழியம்
13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்... 2 முதியவர்கள் உள்பட 3 பேர் அட்டூழியம்
x
13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்... 2 முதியவர்கள் உள்பட 3 பேர் அட்டூழியம் 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.சிலுவத்தூர் அடுத்த ஆர். கல்லுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 37 வயது தங்கவேல், 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டுள்ளார். அவருக்கு இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக்கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த 65 வயது பெருமாள், 70 வயது குருநாதன் இருவரும், சிறுமியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக கிராம மக்கள் பெற்றோருக்கு தகவல் தர, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. புகாரின் பேரில், முதியவர்கள் பெருமாள், குருநாதன் மற்றும் தங்கவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்