வீராணம் ஏரியில் செத்துமிதக்கும் மீன்குஞ்சுகள் - துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு

வீராணம் ஏரியில் செத்துமிதக்கும் மீன்குஞ்சுகள் - துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு
வீராணம் ஏரியில் செத்துமிதக்கும் மீன்குஞ்சுகள் - துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு
x
வீராணம் ஏரியில் செத்துமிதக்கும் மீன்குஞ்சுகள் - துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு

வீராணம் ஏரியில் பல ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் உள்ள வீராணம் ஏரியில், தடுப்பு கட்டைகள் கட்டுவதற்கும்,  தூர் வருவதற்கு ஏதுவாக, தண்ணீர்  நிறுத்தப்பட்டது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால் ஏரிக்குள் சிறு சிறு குட்டைகளில் இருக்கும், மீன்குஞ்சுகள், வெயிலின் சூடு தாங்காமல் செத்து மிதக்கின்றன. இதை உண்ணும் பறவைகளும் ஒவ்வாமை காரணமாக ஆங்காங்கே இறந்துவிடுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 
  
Next Story

மேலும் செய்திகள்