வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்... திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்... திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்... திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
x
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்... திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உதவி பெண் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.சின்ன வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட வந்த திமுக பிரமுகர்கள் இருவரிடம், பணியில் இருந்த காவல் பெண் உதவி ஆய்வாளர் ராணி அடையாள அட்டை காண்பிக்க கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள், அவதூறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ராணி அளித்த புகாரின்பேரில் திமுக பிரமுகர்களான அசோகன் மற்றும்  தண்டபாணி என்ற இருவர் மீது, 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்