அதிமுக உட்கட்சி தேர்தல் - விளக்கம்

கொரோனா தாக்கத்தால் உள்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தல் - விளக்கம்
x
கொரோனா தாக்கத்தால் உள்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதிமுக, பாஜக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களின் உட்கட்சி தேர்தல்களை நடத்தும் வரை சட்டமன்ற தேர்தல் நடத்தக்கூடாது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததது.அப்போது உள்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுக-வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கொரோனா தாக்கத்தை சுட்டிக்காட்டி உள்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.இதனிடையே சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய வழக்கை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்