முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை... வருமான வரித்துறை அதிரடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை... வருமான வரித்துறை அதிரடி
x
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான பொறியியல், மருத்துவம், கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை காந்தி சிலை முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். நேற்றிரவு எ.வ.வேலுக்கு சொந்தமான கல்லூரிக்குள் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த ஸ்டாலின் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு பிரசார மேடைக்கு சென்றார். அவர் பிரச்சாரத்துக்கு சென்ற உடன் வருமான வரித்துறையினர் கல்லூரிக்குள் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 18  இடங்களில்இந்த சோதனை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்