ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை... போலீஸை தாக்கிவிட்டு தப்பியதால் என்கவுன்டர்

கடலூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
x
கடலூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். 

கடலூரை சேர்ந்த வீரா என்ற ரவுடி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கிருஷ்ணன் என்ற ரவுடியை போலீசார் தேடி வந்தனர். அவர் பண்ருட்டியை அடுத்த குடிமியான்குப்பம் பகுதியில்  பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கிருஷ்ணனை கைது செய்ய முன்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு கிருஷ்ணன் தப்ப முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுற்றுக்கொன்றனர். கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்