"ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x
கடந்த 2009 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதிக்கான எம்.பி.  தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 348 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன், 3 லட்சத்து 30 ஆயிரத்து 994 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலில், சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அது செல்லாது என அறிவிக்க கோரி, ராஜ கண்ணப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர்பான குறுக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்தார். அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்