மற்ற மாநில எய்ம்ஸ்க்கு கூடுதல் நிதி-மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.12 கோடி மட்டும் நிதி - டி.ஆர்.பாலு

மதுரை எய்ம்ஸ்க்கு, அடிக்கல் நாட்டியதுடன் கட்டுமானப் பணி கிடப்பில் உள்ளதாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
மற்ற மாநில எய்ம்ஸ்க்கு கூடுதல் நிதி-மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.12 கோடி மட்டும் நிதி - டி.ஆர்.பாலு
x
மதுரை எய்ம்ஸ்க்கு, அடிக்கல் நாட்டியதுடன் கட்டுமானப் பணி கிடப்பில் உள்ளதாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.   

நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்க்கு 12 கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கியது வேதனையான ஒன்று என்றார்.மேலும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், எய்ம்ஸ் கட்டுமானப் பணி எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் உள்ளதாக டி.ஆர். பாலு கூறினார்.இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்சவர்தன், 
டி.ஆர்.பாலு கூறும் 12 கோடி ரூபாய் என்பது இதுவரை மத்திய அரசு விடுவித்த நிதி என்றும்,மதுரை எய்ம்ஸ்க்கு, மொத்தம் ஆயிரத்து 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.ஸைக்கா நிறுவன உதவியுடன் திட்டம் செயல்பட உள்ளதால், தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், ஜூலை மாதம் எய்ம்ஸ் கட்டுமானம் துவங்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்