சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் - கட்டாய ஓய்வு அளித்ததை எதிர்த்து காவலர் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய புகாரில் காவலருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் - கட்டாய ஓய்வு அளித்ததை எதிர்த்து காவலர் வழக்கு
x
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய புகாரில் காவலருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

2009ல் 17 வயது பள்ளி மாணவியை வேலூர் ஆயுதப்படை காவலர் சிவக்குமார் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உறுதி செய்ததை எதிர்த்து, சிவக்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆதாரம் இல்லை எனக்கூறி எஸ்.பி. பிறப்பித்த உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தது. மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரித்து குறைந்த தண்டனை விதிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நாளிலிருந்து 50 சதவீத ஊதியத்தை பெற மனுதாரருக்கு உரிமையுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்