உங்கள் வாகன காப்பீடு ஒரிஜினலா?

20 ஆண்டுகளுக்கும் மேலாக போலி வாகன காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டு, இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கண்களிலிருந்து 20 ஆண்டுகளாக தப்பித்து வந்த கில்லாடி கும்பல், போலீசார் பிடியில் சிக்கி உள்ளது.
உங்கள் வாகன காப்பீடு ஒரிஜினலா?
x
20 ஆண்டுகளுக்கும் மேலாக போலி வாகன காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டு, இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கண்களிலிருந்து 20 ஆண்டுகளாக தப்பித்து வந்த கில்லாடி கும்பல், போலீசார் பிடியில் சிக்கி உள்ளது.பைக் முதல் பலதரப்பட்ட மோட்டார் வாகனத்துக்கும் முக்கியம் இன்சூரன்ஸ் எனும் காப்பீடு.வாகனம் வாங்கும் போது கூடவே இன்சூரன்ஸ் செய்துதருவர். புதுப்பித்தலும் ஓரளவு எளிதாக முடிந்து விடும். ஆனால், அதை திரும்ப பெறுவதில், பெரும் அலைச்சலும், மன உளைச்சலும் ஏற்படுவதை தவிர்ப்பதாக கூறிய 5 பேர், 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கைவரிசை காட்டியுள்ளனர்.போலி வாகன காப்பீடு சான்றிதழ் வழங்கி மோசடி நடப்பதாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது.விசாரணையில், நெல்லையில் வைத்து 7 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைது செய்தனர். மாரியப்பன் என்பவர் மூளையாக செயல்பட, இன்சூரன்ஸ் முகவர்கள் உதவியுடன் பலரையும் மிக எளிதாக முட்டாளாக்கி உள்ளனர்.இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து, லாரி, கன்டெய்னர் போன்ற கனரக வாகனங்கள் என அனைத்துக்கும் போலி காப்பீடு வழங்கி, பணத்தை சுருட்டி உள்ளனர். குறைந்த தொகையில் காப்பீடு என்றதும் பலரும் அங்கு குவிந்ததால், பணத்தில் கொழித்துள்ளனர்.உதாரணமாக, லேப்டாப், ஸ்மார்ட் போன்கள்,133 சவரன் நகைகள், 3 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள்,10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், மற்றும் 9 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.குறைந்த பிரீமியத்தில் காப்பீடு எனக் கூறி, 10 கோடி ரூபாய் வரை பணம் ஈட்டியது அதிரும் ரகம். புதுப்பித்தல், காப்பீடு பெறுதல் என அனைத்துக்கும் தங்களை நாடுமாறு கூறிய கும்பல், சிறு தொகைகளை கொடுத்தும், பலருக்கு பணமே கொடுக்காமலும் அல்வா கொடுத்துள்ளது. தனது வாடிக்கையாளர்கள் வேறு யாரிடமும் செல்லாமல் பார்த்துக் கொண்ட நேர்த்தியான தில்லுமுள்ளுவால், போலீசார் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் 20 ஆண்டுகளாக சிக்கவே இல்லை. இன்சூரன்ஸ் துறையில் கணினி பயன்பாடு வந்தவுடன், அதற்கேற்றார் போல், தங்களையும் மாற்றியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி காப்பீட்டு சான்றிதழ்களை வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தங்கள் வாடிக்கையாளரிடம் இருப்பது ஒரிஜினல் ஆவணம் தானா என, ஆய்வு செய்ய வேண்டும்' என கேட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்