போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் - உயர்நீதிமன்றம் கருத்து

காதல் உறவில் உள்ள பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
x
காதல் உறவில் உள்ள பல  இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இந்திரன் என்பவர் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கு ஈரோடு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்,  இந்திரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி, சம்பந்தப்பட்ட  பெண்ணும், புகார் அளித்த அவரது தாயும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு காணொலி மூலம் விசாரணைக்கு வந்த போது ஆஜரான பெண்ணின் தாய், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.தனது நிர்பந்தத்தால் மட்டுமே இந்திரன் வீட்டை விட்டு தன்னை அழைத்து சென்றதாக  மைனர் பெண் அளித்த வாக்குமூலத்தை சுட்டி காட்டி  இந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது தாய்க்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் மன உளைச்சலை மட்டும் அதிகரிக்கும் என நீதிபதி தெரிவித்தார்.காதல் உறவுக்காக கடுமையான போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படுவதால் பதின்பருவ இளைஞர்கள்,தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.இதுபோன்ற நோக்கத்துக்காக போக்ஸோ சட்டம் கொண்டு வரப்படவில்லை என விளக்கம் அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போக்ஸோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் என்றும் கூறினார்.  



Next Story

மேலும் செய்திகள்