தேர்தல் பணியில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்  திட்டமிட்டபடி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாகவும்,    அதில் பெயர் விடுபட்டு போனவர்கள் மற்றும் முகவரி மாற்றம் தேவைப்படுவோர், புதிய வாக்காளர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு முறையாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வரும் தேர்தல் பணிகளில்  நான்கரை லட்சம் அரசு ஊழியர்களும், பாதுகாப்பு பணிகளில் கூடுதல் போலீசாரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  தமிழகம் வருவார் என்று அவர் தெரிவித்தார்.  80வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் என்றும்  விருப்பமில்லாதவர்கள் ஓட்டுச்சாவடிக்கே வந்து ஓட்டு போடவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்