மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் : பள்ளிகளைத் திறந்ததும் வழங்க திட்டம் - தலைமை செயலாளர் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் மற்றும் கொரோனா தடுப்பு மாத்திரைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் : பள்ளிகளைத் திறந்ததும் வழங்க திட்டம் - தலைமை செயலாளர் கூட்டத்தில் முடிவு
x
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக, பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அடங்கிய அறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்