மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு
பதிவு : நவம்பர் 18, 2020, 07:29 PM
மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்து இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் 
இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்கள், தேர்வு செய்த கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருப்பதால் கலந்தாய்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளையே எப்படி கல்லூரிகளில் சேர முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் வரும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு 
விசாரணைக்கு வருவதால், அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

26 views

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: "தாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன்?" - மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

27 views

டி.பி.எஸ் இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில், சிங்கபூரை சேர்ந்த டி.பி.எஸ் வங்கியின் துணை நிறுவனமான டி.பி.எஸ் இந்தியா 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

24 views

"ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் , அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்" - நீதிபதிகள்

ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

15 views

புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் - தென்தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10332 views

புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயல் "வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்"- சென்னை வானிலை ஆய்வு மையம்

கரையை கடந்த நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் அது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.