பள்ளிகளை திறப்பது நியாயமா? - ஸ்டாலின் கேள்வி
பதிவு : நவம்பர் 03, 2020, 02:50 PM
நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், பள்ளிகள் திறக்கப்படும் போது, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், உள்ளிட்ட நடைமுறைகளைப் எந்த அளவிற்குச் செயல்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அவசர கதியில் முடிவு எடுக்காமல், பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் பதற்றத்தை போக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

பிற செய்திகள்

சுற்றறிக்கையை வாபஸ் பெறுங்கள் - இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. கடிதம்

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்க பீகார் தேர்தலில், தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.

484 views

அழகிரியின் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட முடிவு - கனிமொழி

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - அழகிரியின் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட முடிவு

81 views

சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்" - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

வரும் சட்டப் பேரரை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

218 views

பெருங்குளத்தூரில் பா.ம.க.வினர் சாலை மறியல் - முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடும் பாதிப்பு

பெருங்குளத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

308 views

பாரம்பரியம் என்றால் சிலருக்கு குடும்பமும், குடும்ப பெயரும் தான் - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

ஒரு சிலருக்கு அவர்களின் குடும்பப் புகைப்படங்கள் தான் பாரம்பரியம் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

25 views

கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை: "சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும்"- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சகாயம் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.