ஜெ.தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு

தங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக, சென்னை காவல் ஆணையரிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில், தீபா, தீபக் ஆகியோரை சட்டப்பூர்வ வாரிசுகளாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை துவங்க உத்தரவிட்டு, இருவருக்கும் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபா மற்றும் தீபக்கிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும், அதற்கு பதில் அளிக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, அரசு தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் கோரியதை தொடர்ந்து, நவம்பர் 24ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்