வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
பதிவு : நவம்பர் 01, 2020, 09:52 PM
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல், 63 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு, கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு உள்ள அய்யனார் கோயில் மைதானத்தில் வைக்கப்பட்ட துரைக்கண்ணு உடலுக்கு,
அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அவருடையை உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது வன்னியடி தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா நெறிமுறைகள் படி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3347 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4441 views

"கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கதவில், போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை"

கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்கள் குறித்த விவரங்களுடன் போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

210 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.