தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
சென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லோட்டஸ் ராமசாமி தெருவில் அமைந்துள்ள, குடோனில் மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படும், சூட்கேஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில், குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

Next Story

மேலும் செய்திகள்