7.5% இடஒதுக்கீடு: "இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வருவோம்" - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

தேவர் குருபூஜையை யொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ​செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டை வைத்து சிலர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். இந்த ஆண்டே 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்றும், அப்போது அவர் உறுதிபடக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்