"தீபாவளி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
தீபாவளி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
x
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் நூல் வெளியீட்டு விழாவில் முத்தரசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா பொது முடக்கம் காரணமாக, பொதுமக்கள் தீபாவளியைக் கொண்டாட முடியாத அளவுக்கு நிதி நெருக்கடியில் உள்ளனர். எனவே, தீபாவளி நிவாரணத் தொகையாக ரேசன் கார்டுகளுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.   


Next Story

மேலும் செய்திகள்