திருச்சி : தற்காலிக சந்தை தொடர ரயில்வே நிர்வாகம் 'பச்சைக்கொடி'

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி சந்தை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
திருச்சி : தற்காலிக சந்தை தொடர ரயில்வே நிர்வாகம் பச்சைக்கொடி
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி சந்தை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல், திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும், 31 ஆம் தேதிக்குள் மைதானத்தை காலி செய்து தரும்படி, மாவட்ட நிர்வாகத்திற்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பது குறித்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிக சந்தை செயல்பட, ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்