கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள்

ஈரோட்டில் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டாத 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள்
x
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கல்வி குழுமத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் முதல்  சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, கோவை, திருப்பூர் என 22 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களிடம் இருந்து பெறும் தொகையை கணக்கில் காட்டாமல் சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ததும் தெரியவந்தது. இந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில லாக்கர்கள் உள்ளதாகவும் அவற்றை திறந்து சோதனையிட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்